tamilnadu

img

குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறுக பீடி-சுருட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், பிப்.18- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம் கொக்கராயன்பேட்டையில் சிஐடியு பீடி- சுருட்டு தொழிலாளர் சங்கம் சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தை திரும்ப  பெற வலியுறுத்தி செவ்வாயன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தும் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும். பீடி தொழி லாளர்கள் உள்ளிட்ட அனைத்து உழைப் பாளிகள் நலனைப் புறக்கணிக்கும் மத்திய  அரசின் பட்ஜெட்டை கண்டித்தும், தொழி லாளிக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.21 ஆயிரமும், ஓய்வூதியமாக ரூ.6  ஆயிரம் என்பதை சட்டமாக்க வேண்டும்.   பீடி தொழிலாளர்கள் கூலி உயர்வு பேச்சு வார்த்தையை விரைந்து முடிக்க வலியு றுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பினர்.  ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் எஸ்.கைபானி தலைமை வகித்தார். சிஐடியு மாநில குழு உறுப்பினர் எஸ்.சுப்ர மணியன், மாவட்ட துணைத் தலைவர் எம்.அசோகன், மாவட்ட துணைச் செயலாளர் கே.மோகன், பீடி தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ஆர்.செந்தில்குமார், சிபிஎம்  ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சி.துரைசாமி,செயலாளர் வி.பி. சபாபதி உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். சங்க பொருளாளர் பி.சாஜாதி நன்றி கூறி னார்.