tamilnadu

img

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் செய்யலாம்

சென்னை, ஜன. 11- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கட்டணமில்லா தொலைப்பேசி மூலம் புகார் தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை இயக்கப்பட உள்ள ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 18004256151 என்ற தமிழக அரசின் கட்டணமில்லா தொலைப்பேசி மூலம் புகார் தெரிவிக்கலாம். 2.12.2019 முதல் 8.1.2020 வரை தமிழகம் முழுவதும் வாகன சிறப்புத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு 22,295 வாகனங்களுக்கு அபராதம் மற்றும் வரியாக ரூ.8.33 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் சிரமமின்றி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள ஆம்னி பேருந்துகளில் ஆய்வு மேற்கொள்ளச் சிறப்புத் தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு டிச.2ஆம் தேதி முதல்  ஜன. 8ஆம் தேதி  வரை தமிழகம் முழுவதும் வாகன சிறப்பு தணிக்கை மேற் கொள்ளப்பட்டு, அதன் மூலம் 22,295 வாக னங்களுக்குச் சோதனை அறிக்கை வழங்கப்பட்டு அபராத தொகை ரூ. 2 கோடியே 21 லட்சத்து 23 ஆயிரத்து 125, வரி பாக்கி என மொத்தம் ரூ. 8 கோடியே 33 லட்சத்து 39ஆயிரத்து 788 ரூபாய் வருவாய் ஈட்டப்பட் டுள்ளது என்றும் அரசு கூறியுள்ளது. மேலும் 2224 வாகனங்கள் பல்வேறு குற்றங்களுக்காகச் சிறை பிடிக்கப்பட்டுள்ளது. இவ்வகையான சிறப்புத் தணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அந்த செய்திக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.

;