tamilnadu

img

இராமநாதபுரம், விருதுநகரில் புதிய மருத்துவக் கல்லூரிகள் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

இராமநாதபுரம்/விருதுநகர், மார்ச் 1- இராமநாதபுரம், விருதுநகரில் புதிய மருத்துவக்கல்லூரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மார்ச் 1 ஞாயிறன்று அடிக்கல் நாட்டினார். இராமநாதபுரத்தில் 345 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய மருத்துவக் கல்லூரிக்கும்  விருது நகரில் 380 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய மருத்துவக் கல்லூரிக்கும்  அடிக்கல் நாட்டு விழா   மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமை யில் நடைபெற்றது.   இராமநாதபுரம் விழாவில் முதல்வர் பேசியதாவது: இந்தியாவிலேயே ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளைப் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு. அந்த 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில், முதல் அடிக்கல் நாட்டு  விழா காணும் மாவட்டம் இராமநாதபுரம். இந்த மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தி லிருந்து, அவசர மற்றும் உயர் மருத்துவ சிகிச்சைகளுக்காக, சுமார் 100 கிலோ மீட்டருக்கு மேல்  உள்ள மதுரைக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால்,   இந்த மாவட்டத்தில் அரசு மருத்து வக் கல்லூரி  மருத்துவமனை  அமைக்கப்பட வேண்டும் என பிரதமரை  வலியுறுத்தினேன். அதன் பலனாக மருத்துவக்கல்லூரி கிடைத்துள்ளது. இராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள்  தொடங்க தலா 20 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு இடங்களில் 2021-2022-ஆம் கல்வியாண்டு  முதல் தலா 150 மாணவர் சேர்க்கையுடன், புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கும், இதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள வும்,  தலா 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக,  கிருஷ்ணகிரி,  திருவள்ளூர் மற்றும்  நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டு,  தேவையான நிதியும்  ஒதுக்கி அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். மேலும் பல்வேறு நலத்திட்டங்களை அவர் அறிவித்தார்.  இந்நிகழ்வில் மத்திய சுகாதாரம்- குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், மக்கள் நல்வாழ்வு- குடும்ப நலத் துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், மக்களவை உறுப்பி னர்கள் க.நவாஸ்கனி, ரவீந்திரநாத், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.மணிகண்டன், எஸ்.கரு ணாஸ், என்.சதன்பிரபாகர், எஸ்.பாண்டி, மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ், மாவட்ட ஊராட்சித் தலைவர் திசைவீரன், ஊராட்சித் தலைவர் எம்.சித்ராமருது உட்பட ஏராளமா னோர் கலந்துகொண்டனர்.

மாநகராட்சி ஆகிறது சிவகாசி
விருதுநகர் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், விருதுநகர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளதாகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும் தரமான மருத்துவக் கல்வி கிடைக்க உறுதி செய்யப் பட்டுள்ளது என்றும் கூறினார். மேலும் குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசி நக ரம், விரைவில் மாநகராட்சியாக உதயமாகி றது. இதற்கான பூர்வாங்கப் பணிகள் துவங்கி விட்டதாக அறிவித்த முதலமைச்சர், சிவகாசி நகர உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக 50 கோடி ரூபாயையும் ஒதுக்குவதாகவும் அறிவித்தார். விழாவின்போது, சிவகாசி, விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை தொகுதிகளில் 234 கோடி ரூபாய் செலவில் முடிவடைந்துள்ள தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தையும் முத லமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார். விருதுநகர் நகராட்சிக்காக 444 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பிலான தாமிர பரணி புதிய கூட்டு குடிநீர் திட்டம் உள்பட பல்வேறு புதிய திட்டங்களுக்கும் முதல மைச்சர் அடிக்கல் நாட்டினார். இவ்விழாவிற்கு தமிழக தலைமைச் செய லாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பியூலா ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்த னர். தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் விளக்கிப் பேசி னர். மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் நன்றி கூறினார்.   மேலும் இதில் செய்தி- விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், வரு வாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கூரைக்குண்டு ஊராட்சிமன்றத் தலைவர் இ. செல்வி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

;