ஊரடங்கு காரணமாக வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள பெருவாயலில், தனியாருக்கு சொந்தமான டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வந்த மத்தியப் பிரதேசம், ஒரிசா, உத்தரப்பிரதேசம், ஒரிசா, பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, தொழிலாளர்கள் மே 16 ஆம் தேதி முதல் குவிந்துள்ளனர்.
இந்த தொழிலாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர கிளை சார்பில் 1700 பேருக்கு மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது. இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துளசிநாராயணன், வி.ஆர்.லட்சுமணன், பி.பிரசன்னா, குப்பன், டிஜெஎஸ் கல்வி குழுமத்தின் தலைவர் டி.ஜெ.கோவிந்தராசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தனிமனித இடைவெளியை கடைபிடித்ததோடு, தொழிலாளர்களை சுகாதார துறையினர் பரிசோதனையும் செய்தனர்.