கோவை மாவட்டம், காரமடையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கான இலவச வகுப்புகள் துவங்கப்பட்டது. இந்நிகழ்வில் காரமடை காவல் ஆய்வாளர் பாலசுந்தரம், மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ராஜலட்சுமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். குழந்தைகளுக்கான வகுப்புகளை துவக்கி வைத்து ஆசிரியர்களாக. சாந்தி, ஹேமா ஆகியோர் பயிற்று வித்தனர். இதில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். கோவை மாவட்டத்தில் பரவலாக இதுபோன்ற வகுப்புகளை நடத்தும் முயற்சியில் மாதர் சங்கம் ஈடுபட்டுள்ளது.