tamilnadu

img

5 லட்சம் விசைத்தறி தொழிலாளர்களின் வேலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்துக

விசைத்தறி தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தல்

மதுரை, அக்.19-  5 லட்சம் விசைத்தறி தொழி லாளர்களின் வேலைப் பாது காப்பை உறுதிப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய முறையில்  தலையிட வேண்டும் என்று தமிழ்நாடு விசைத்தறி தொழிலா ளர் சம்மேளனம் (சிஐடியு) வலி யுறுத்தியுள்ளது. சம்மேளனத்தின் (சிஐடியு)வின் மாநிலக்குழு கூட்டம் அக்டோபர் 16 அன்று மதுரையில்  மாநிலத் தலைவர் பி.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. மாநிலப் பொதுச் செயலாளர் எம்.சந்திரன், சிஐடியு மாநிலச்  செயலாளர் கே.சி.கோபி குமார், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.சுப்பிரமணி யம், பொருளாளர் எம்.அசோ கன் உள்பட மாநில நிர்வாகி கள் மாநிலக்குழு உறுப்பி னர்கள் பங்கேற்றனர்.

மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன் வரவேற்றுப் பேசினார். சிஐடியு மாநில உதவித் தலைவர் ஆர்.தெய்வ ராஜ் வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு: மத்திய மோடி பாஜக அரசு  உழைக்கும் மக்களின் உரிமை களை பறிக்கிற சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறை வேற்றியுள்ளது. குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிற போது, மாத ஊதியம் ரூ.4675 என்று தன்னிச்சையாக அறிவித்துள்ளது என்பது இந்திய தொழிலாளர்கள் மத்தி யில் அதிர்ச்சியாக உள்ளது. தினசரி 176 ரூபாயில் எப்படி வாழ்க்கை நடத்த முடியும்?    பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பால் விசைத்  தறி தொழில் கடுமையான நெருக்  கடிக்கு உள்ளாக்கப்பட்டு அதி லிருந்து மீளாத நிலையில் உள்ளது. தற்போது நூல் விலை  உயர்வு உள்ளிட்ட காரணங்க ளால் தொழிலாளர்களுக்கு வேலையின்மை உருவாகி யுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் விசைத்தறி தொழி லாளி கடன் வாங்கி திருப்பிக் கட்ட இயலாமல் பைனான்ஸ் நிர்பந்தம் காரணமாக தற் கொலை செய்துள்ளார். இது போன்ற சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது. இப்படிப்பட்ட சமூக பிரச்ச னைக்கு தீர்வு காணாமல் மத்திய  மோடி அரசும், மாநில எடப்பாடி  அரசும் வேடிக்கை பார்ப்பது  கண்டிக்கத்தக்கது. மேற்கண்ட  நெருக்கடிகளுக்கு தீர்வுகாண வும், விசைத்தறி தொழிலை பாது காக்கவும், 5 லட்சம் தொழிலா ளர்களின் வேலை பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மத்திய -  மாநில அரசுகள் உரிய முறையில் தலையிட வலியுறுத்தியும் மாவட்டங்களில் கருத்தரங்கம், ஆர்ப்பாட்டம் போன்ற இயக் கங்கள் நடத்தப்படும். 

அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகமாகி உள்ளது. எனவே, மாநிலம் முழு வதும் விசைத்தறி தொழிலாளர்க ளுக்கு சேர வேண்டிய தீபாவளி  போனஸ் இன்னும் சில தினங்  களே உள்ள போது, கடந்த  ஆண்டை காட்டிலும் கூடுதலாக  நியாயமான போனஸ் தொகை சதவிகித அடிப்படையில் உட னடியாக வழங்க வேண்டும். ஜனவரி 8 அன்று நடை பெறும் நாடு தழுவிய பொது  வேலைநிறுத்தப் போராட்டத் திற்கு தமிழகத்தில் மத்திய சங்  கங்களுடன் இணைந்து விசைத் தறி அரங்கத்தில் வேலை நிறுத்த கோரிக்கைகளை விளக்கி தொழிலாளர்கள் மத்தி யில் பரந்துபட்ட பிரச்சார இயக்  கங்கள் நடத்தப்படும். வேலை நிறுத்தப் போராட்டத்தில் பல  லட்சம் விசைத்தறி தொழிலா ளர்கள் பங்கேற்பார்கள். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

;