சென்னை,மே 27- தமிழகத்தில் ஊரடங்கு மீறலில் ஈடுபட்டோரிடம் இருந்து ரூ.8.09 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 144 தடை உத்தரவை மீறிய தாக தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 36 ஆயிரம் பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 25 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்ய ப்பட்டுள்ளன. இதுவரை ரூ.8.09 கோடி அபராதம் வசூல் செய்யப் பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.