tamilnadu

img

ரூ.6580.15 கோடிக்கு துணை மதிப்பீடு தாக்கல்

சென்னை, ஜன. 9- தமிழக சட்டப்பேரவையில் வியாழனன்று (ஜன.9)2019-2020 ஆம் ஆண்டுக்கான 2வது துணை மதிப்பீட்டை தாக்கல் செய்து பேசிய துணை முதல மைச்சர் ஓ.பன்னீர் செல்வம், “இந்த துணை மதிப்  பீட்டில் ரூ.6580.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதற்கு  வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டி கையை முன்னிட்டு அனைத்து அரிசி அட்டைதாரர்க ளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய்  ரொக்க தொகை வழங்க அரசு ரூ.2363.13 கோடி அனுமதித்துள்ளது” என்றார். சென்னை- கன்னியா குமரி தொழில் வழித்தட  திட்டத்தின் கீழ் இரண்டு மின்தொடர் அமைப்பு திட்டங்களை நிறுவ அரசு ரூ. 4332.57 கோடிக்கு  நிர்வாக அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்துக்காக  துணை மதிப்பீடுகளில் மொத்தம் 108 கோடி ரூபாய்  எரிசக்தி துறைக்காக சேர்க்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் அதிக பாதிப்பு அடைய கூடிய கரையோர பகுதிகளில் நீண்டகால வெள்ள நிவாரண பாதுகாப்புக்கு அரசு ரூ.290.78 கோடி அனுமதித்துள்ளது. கோவை விமான நிலைய ஓடுதளத்தை விரி வாக்குவதற்காக மேற்கொள்ள நிலம் எடுப்புக்காக இழப்பீட்டு தொகை நில உரிமையாளர்களுக்கு வழங்க ரூ.189.30 கோடியை அனுமதித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். திண்டுக்கல், ராமநாதபுரம், நீலகிரி, திருப்பூர்,  விருதுநகர், நாமக்கல், திருவள்ளூர், நாகை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தொடங் கப்படும் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அரசு ரூ.3,266.47 கோடி நிருவாக அனுமதியளித்துள்ளது. முதற்கட்ட மாக துணை மதிப்பீடுகளில் ரூ.90 மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது. 

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்து டன் இணைந்து கிராமப்புறங்களில் உள்ள ஏரி,குளம், ஊரணிகளை புதுப்பிக்கும் பணிகளுக்காக அரசு ரூ.500 அனுமதித்துள்ளது. இதற்காக ரூ.346.04 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். கரும்புக்கான நியாயமான மற்றும் ஆதாய விலை (எப்ஆர்பி) நிலுவைத் தொகையை வழங்க  10 கூட்டுறவு, 2 பொதுத்துறை சர்க்கரை ஆலை களுக்கு ரூ.143.73 கோடி வழிவை முன் பணமாக  அரசு அனுமதித்துள்ளது. மேலும் நேஷனல், அமரா வதி, என்.ஆர்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை  ஆலைகள் தங்கள் பணியாளர்களுக்கு சட்டப்படி யான நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு ரூ.28.74 கோடி தொழில் துறையின் கீழ் சேர்க்கப்  பட்டுள்ளது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரி வித்தார்.

;