tamilnadu

img

ஜன. 25-ல் இரவு அரசியல் சாசன உறுதிமொழி ஏற்பு

சென்னை,ஜன.17- இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தைப் பாதுகாக்க ஜன.26 குடியரசு தினத்தன்று நாடு முழு வதும் அரசியல் சாசன உறதி மொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடத்த,  அகில இந்திய அளவில் ஐம்ப துக்கும் மேற்பட்ட மாற்றுத்திற னாளிகளுக்கான உரிமை அமைப்புகள், ஆர்வலர்கள் தில்லியில் இணைந்து கூட்டாக அறைகூவல் விடுத்துள்ளனர்.  இந்த அறைகூவலை தமி ழகத்தில் உள்ள லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் சார்பில் அர சியல் சாசன உறுதிமொழி ஏற்பு  இயக்கத்தை பல்வேறு மாற்றுத் திறனுடையோர் உரிமை அமைப்புகள், ஆர்வலர்கள் கூட்டாக இணைந்து வெற்றிகர மாக முன்னெடுக்க தீர்மானித் துள்ளார்கள். அதன்படி, சென்னை உயர்நீதி மன்றம் முன்பாக “இந்திய அரசிய லமைப்புச் சட்டத்துக்கான” மாற்றுத்திறனுடையோர் கூட்டு இயக்கம் சார்பில் சென்னையில் உயர்நீதிமன்றம் (பாரிமுனை) முன்பாகவும், தமிழகம் முழுவ தும் உள்ள மாவட்ட நீதிமன்றங்  கள் முன்பாகவும்  ஜன25 இரவு  12 மணிக்கு அரசியல் சாசன  உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள்  நடத்த நாங்கள் தீர்மானித்துள்ள தாக தமிழ்நாடு அனைத்து வகை  மாற்றுத்திறனாளிகள் மற்றும்  பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் பொதுச்  செயலாளர் நம்புராஜன் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கி றார்.

இந்திய அரசியல் சாச னத்தைப் பாதுகாப்பது நமது தேசபக்த கடமை என்பதால், இந்த  இயக்கத்தில் தமிழகம் முழுவ தும் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும்,  மாற்றுத்திறனுடையோர் உரிமை களுக்காக செயல்படும் மற்ற அமைப்புகளும் பங்கேற்று, இந்த இயக்கத்தை வெற்றிகரமாக்க வேண்டும் என்றும் நம்புராஜன் வேண்டுகோள்விடுத்திருக்கிறார்.

அரசியல் சாசன உறுதிமொழி வாசகம்

“நாம், இந்திய மக்கள், உறுதி  கொண்டு முறைப்படி தீர்மா னித்து, இந்தியாவை ஓர் இறை யாண்மை, சமூகசமத்துவ, சமய சார்பற்ற, மக்களாட்சி குடியரசாக கட்டமைத்திடவும், மற்றும் இதன் எல்லா குடிமக்களுக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி எண்ணம், கருத்து, பக்தி, நம்பிக்கை மற்றும் வழிபாடு தன்செயலுரிமை; படிநிலை மற்றும் வாய்ப்பு சமத்துவம் ஆகி யன உறுதிசெய்திட: மற்றும் தனி நபர் கண்ணியத்தையும், தேசிய  ஒற்றுமை மற்றும் ஒருமை பாட்டையும் உறுதிப்படுத்த அனைவரிடத்திலும் உடன்பிறப் புணர்வை ஊக்குவித்திட”. இந்திய குடியரசு தினத்தன்று நான் உறுதி ஏற்கிறேன்”.
 

 

;