tamilnadu

img

ஏ.சி. பழுதாகி மூச்சுத் திணறல் : ஆம்னி பேருந்து நிறுவனத்துக்கு அபராதம்

சென்னை,ஜன.2- ஏ.சி. பழுதாகியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பயணிக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்துக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கொட்டிவாக்கம் வெட்டு வாங்கேணி பகுதியை சேர்ந்தவர் மதன் சுந்தரம். இவர் தென்காசியில் இருந்து சென்னைக்கு தனி யார் ஆம்னி பேருந்தில் ரூ.1,150 கட்டணம் செலுத்தி பயணித்துள்ளார். பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டி ருக்கிறது. இது குறித்து ஓட்டுநரிடம் தெரிவித்த போது ஏ.சி. பழுதாகி இருப்பதாக தெரி வித்திருக்கிறார்.

கண்ணாடி முழுவதும் மூடி இருந்ததால் பயணிகள் மிகுந்த சிரமத்துடன் பயணம் செய்திருக்கிறார்கள். அப்போது, மதுரையில் மெக்கானிக் இருப்பதாகவும் பழுது பார்த்து விடலாம் எனவும் ஓட்டுநர் தெரிவித்துள்ளார். ஆனால் மதுரையில் மெக்கானிக் இல்லை. பின்னர் திருச்சியில் சரி செய்து விடலாம் எனக் கூறியுள்ளார். இது குறித்து ஆம்னி பேருந்து நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் மன உளைச்சலுக்குள்ளான மதன், மதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், வேறு பேருந்தை ஏற்பாடு செய்து அழைத்துச் செல்லுமாறு ஓட்டுநருக்கு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து அந்த பேருந்து அடுத்த நாள் மதியம் 1 மணிக்கு சென்னை வந்துள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளான மதன் சுந்தரம், இழப்பீடு கேட்டு சென்னை நுகர் வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி மோனி, உறுப்பினர் பாஸ்கர் குமரவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரித்த நீதிபதி, பயணிக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய தனியார் ஆம்னி பேருந்து நிறுவனம் ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். 2015 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தின் தீர்ப்பு இப்போது நுகர்வோர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

;