tamilnadu

img

ஒரே நாளில் 527 பேருக்கு தொற்று

கொரோனா பரவல் தமிழகமே அதிர்ச்சி

மதுரை, மே 1- தமிழகத்தில் மூன்றாம் கட்ட ஊரடங்கு திங்களன்று நள்ளிரவு 12 மணிக்கு தொட ங்கியுள்ள நிலையில் அரசு வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பு தமிழகத்திற்கே பேரதிர்ச்சி யை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

திங்களன்று மட்டும் 527 பேருக்கு  கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. இதையடுத்து மொத்த எண் ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளது. குணம டைந்துள்ளோர் மொத்த எண்ணிக்கை 1,409. மொத்த எண்ணிக்கையில் குணமடைந்த வர்களை கழித்துவிட்டால் 2,107 பேர் மருத்து வமனையில் உள்ளனர். கொரோனா இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 2,662 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்று பாதிக்கப்பட்டுள்ள 527 பேரில் 377 பேர் ஆண்கள். 150 பேர் பெண்கள். திங்க ளன்று 12,863 சாம்பிள்கள் சோதனை செய் யப்பட்டுள்ளன. மொத்த சாம்பிள்களின் எண் ணிக்கை 1,62,970. நபர்கள் எண்ணிக்கை யில் 1,53,489 பேருக்கு சோதனை நடத்தப் பட்டுள்ளது. தமிழகத்தில் ஆய்வகங்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிக்கப்பட்டுள் ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உள்ளது.

திங்களன்று தொற்றால் பாதிக்கப்பட் டவர்களில் மிக அதிகமானவர்கள் கோயம்பேடு பகுதியில் தொற்றால் பாதிக்கப்பட்டவரிடம் தொடர்பிலிருந்த வர்கள் ஆவார். திங்களன்று மாவட்டவாரி யாக பாதிக்கப்பட்டோர் நிலவரம்:-

சென்னை-266, கடலூர்-122, விழுப்பு ரம்-49, பெரம்பலூர்-25, திருவண்ணாமலை 11, திண்டுக்கல்-10, தென்காசி, திரு வள்ளூர் தலா ஒன்பது பேர், அரியலூர் ஆறு பேர், செங்கல்பட்டு நான்கு பேர், இராணிப் பேட்டை மூன்று பேர், விருதுநகர் இரண்டு பேர், கன்னியாகுமரி, மதுரை, இராமநாத புரம், தஞ்சாவூர், திருப்பூர் ஆகிய மாவட் டங்களில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள னர். 12 வயதிற்குட்பட்டவர்களில் ஞாயி றன்று 170 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த எண்ணிக்கை 190 அதிகரித்துள்ளது. திங்க ளன்று மட்டும் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.