tamilnadu

img

தமிழகத்தில் ஒரே நாளில் 70 ஆயிரம் கொரோனா மாதிரிகள் வருகை...  

சென்னை 
தமிழகத்தில் மின்னல் கொரோனா பரவல் இருப்பதால் அறிகுறி தொடர்பான மாதிரிகளின் வருகை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் இன்று (ஞாயிறு) புதிய உச்சமாக ஒரே நாளில் 70,186 மாதிரிகள் பரிசோதனைக்கு வந்தன. இதில் 68,179 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பரிசோதனைக்கு பிறகு 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. மேலும் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை மாற்றமில்லாமல் 129 ஆக உயர்ந்துள்ளது.  

மொத்த அறிகுறி மாதிரிகளின் எண்ணிக்கை - 32,25,805

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை -31,09,708