tamilnadu

img

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் நேற்றிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 
இந்தோனேசியாவின் மொலுக்கா தீவு அருகே உள்ள கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வடமேற்கு நகரமான டெர்னேட் என்ற இடத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தினால் மனாடோ நகரில் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு திரும்பப்பெறப்பட்டது.  இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு காரணமாக இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவில் நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 5 ரிக்டர் அளவுக்கு இந்த  நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.