tamilnadu

img

யாசர் அராபத் நினைவு நாள்...

யாசர் அராபத் 1929ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ஆம் நாள் பிறந்தார்.

இவர் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராக செயலாற்றியவர். அபூ அம்மார் என்று அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்பட்டார். 1994 இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மூவரில் ஒருவர்.யாசர் அராபத் ,சுயநிர்ணய-பாலஸ்தீனம் என்ற பெயரில் இஸ்ரேலுக்கு எதிராக மிகவும் வலிமையான போராட்டம் நடத்தியவர்.

அவர் இஸ்ரேல் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து ஈடுபட்டுபல தசாப்தங்களாக நிலவிய மோதலுக்கு முடிவு எட்ட முயற்சித்தார் .அவற்றின்மத்தியில் முக்கியமானவை - 1991 மாட்ரிட் மாநாடு, 1993 ஒஸ்லோ உடன்பாடு மற்றும் 2000 காம்ப் டேவிட் உச்சி மாநாடு.யாசர் அராபத் 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் நாள் மறைந்தார்.இவரது இறப்புத் தொடர்பாகச் சந்தேகப்படுவதற்கான காரணிகளைப் பெற்றுக்கொண்ட இவரது மனைவியின் வேண்டுகோளின் பேரில் இவரது ஆடை உட்பட இறப்பின் போது இவரிடமிருந்த பொருட்கள் 2012ல் சுவிட்சர்லாந்து நாட்டுப் பரிசோதனைக்கூடம் ஒன்றில் வேதியியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. யாசர் அராபத்தின் இறப்புக்குக் காரணம் அவருக்குப் பொலோனியம்-210 எனும் நஞ்சூட்டப்பட்டிருப்பதே என்பதை அவ்வாய்வுகள் உறுதிப்படுத்தின.இத்தகைய இழிசெயல் அமெரிக்க ஏகாதிபத்தியம் செய்ததாகும்.அவரது சவப்பெட்டியில் பாலஸ்தீனிய கொடி போர்வையாகச் சூழப்பட்டு 11 நவம்பர் 2004ல் பிரெஞ்சில் ஒரு சிறிய விழா நடைபெற்றது . ஒருஇராணுவ இசைக்குழுவினர் , பிரஞ்சு மற்றும் பாலஸ்தீன தேசிய கீதங்களை வாசித்தனர். பிரஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக் அவரை ‘தைரியத்தின் மனிதன் ‘ எனபாராட்டினார். அடுத்த நாள் , அராபத்தின் உடல் மாநிலங்களில் உள்ள பிரதம மந்திரிகள் மற்றும் வெளியுறவு மந்திரிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டது.பின்பிரஞ்சு விமானப்படையின் விமானம் மூலம்  பாரிஸில் இருந்து ஜெருசலேமுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் இஸ்ரேல் அரசு ஜெருசலேமில் அராபத்தை புதைக்க அனுமதிக்க மறுத்துவிட்டது. ரமலாவில் அராபத்தை ஒரு “ தற்காலிக “கல்லறையில்  2004ல் புதைத்தனர்.

===பெரணமல்லூர் சேகரன்===

;