tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் - மக்கள் எழுத்தாளர் மக்சிம் கார்க்கி நினைவு நாள்

மக்கள் எழுத்தாளர்  மக்சிம் கார்க்கி நினைவு நாள்

சோவியத் புரட்சியை முன்னெடுத்துச் செல்லவும், புரட்சிக்குப்பின் அதனை அரண்போல் காத்திடவும் தன் எழுத்துக்களையே ஆயுதமாக்கி புரட்சிப் படையின் முன்னணியில்  நின்றவர் மக்சிம் கார்க்கி.  மக்சிம் கார்க்கி என்றவுடன் நம் நினைவிற்கு வருவது தாய் நாவலும் அவருடைய சிறுகதைகளும், நாடகங்களுமே. ஆனால், 1901ல் அவர் எழுதிய ‘புயல் பறவையின் பாடல்’ எனும் கவிதை மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. புரட்சியைப் புகழ்ந்து பாடிய இக்கவிதையை லெனின் மிகவும் பாராட்டினார். 

ஒரு குட்டி மிஷ்கின் பறவை தான் கேட்ட பாடல் ஒன்றை சுவைபடக் கூறுகிறது. மற்ற பறவைகள் எல்லாம் மெய் மறந்து  கேட்கின்றன. ஜன்னலுக்குப் பின்னால் அமர்ந்து ஒட்டுக்கேட்கும் கவிஞனுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கிறது.  புயலினும் வேகமாகப் பறந்து கொண்டே குட்டிப் பீட்ரெல் பறவை புரட்சியை வரவேற்றுப் பாடுகிறது. வரவிருக்கும் புரட்சியை தன் உரத்த குரலால் முன்னறிவிப்பு செய்கிறது. அதிகார வர்க்கத்திற்கு, ஜார் மன்னரின் எதேச்சதிகாரிகளுக்கு இப்பாடல் பிடிக்கவா செய்யும்? தடை செய்ய மாட்டார்களா என்ன? இந்தப் பாடல் போல்ஷ்விக்குகளுக்கு உற்சாகம் அளித்திருக்கும் என்பதில் சந்தேகம் ளஇல்லை. இதனாலேயே இப்பாடலுக்காக கார்க்கி கைது செய்யப்பட்டார். இதனாலேயே லெனின் இந்தப் பாடலைப்பெரிதும் விரும்பினார். சோவியத் ஆட்சியும் மலர்ந்தது.

-பெரணமல்லூர் சேகரன்

;