tamilnadu

img

ஒத்துழைப்பை விரிவாக்கி நம்பிக்கையை வலுப்படுத்துவோம்

பிஷ்கேக், ஜுன் 14 - சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங்  ஜுன் 13ஆம் நாள்   வியாழனன்று கிர்கிஸ்தா னின் தலைநகரான பிஷ்கேக்கில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித் தார். அப்போது பேசிய ஜி ஜின் பிங்,  நூறு கோடிக்கும் மேலான  மக்கள் தொகை கொண்ட நாடுகளான சீனா வும் இந்தியாவும் வேகமாக வளர்ந்து வரும் காலத்தில் உள்ளன. நெருங்கிய வளர்ச்சிக் கூட்டுறவை மேலும் முன்னேற்றும் வகை யில் சீனா இந்தியா வுடன் கூட்டாக முயற்சி செய்ய விரும்புகின்றது என்று ஜி ஜின் பிங் சுட்டிக்காட்டினார். இரு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று வாய்ப்பு களை வழங்க வேண்டுமே தவிர அச்சுறுத்தலை உரு வாக்கக் கூடாது என்பதில் சீனாவும் இந்தியாவும் ஊன்றி நிற்க வேண்டும். ஒத்து ழைப்பை விரி வாக்கி, நம்பிக்கையை வலுப் படுத்தி, தடையில்லா வர்த்தகத்தையும் பலதரப்பு வாதத்தையும் கூட்டாகப் பேணிக்காத்து, வளரும் நாடு களின் உரிமையைப் பாது காக்க வேண்டும் என்றும் ஜி ஜின் பிங் வலியுறுத்தினார். அங்கு இந்தியப் பிரதமர் மோடி பேசுகையில், சீனா வுடனான தொடர்பை வலுப் படுத்தி, பரந்த அளவிலான துறைகளில் இருதரப்பு உறவை முன்னேற்றி, கருத்து வேற்றுமைகளை சீராகக் கையாள வேண்டும். அடுத்த ஆண்டில் இருநாட்டு தூதரக உறவு ஏற்படுத்தப் பட்ட 70ஆம் ஆண்டு நிறை வாகும். அதையொட்டி அத ற்குரிய நடவடிக்கைகளுக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்து இருநாடுகளிடையேயான பண்பாட்டுப் பரிமாற்றத்தை மேம்படுத்த வேண்டும் என்று கூறினார்.

;