tamilnadu

img

ரஷ்யாவின் துணை பிரதமருக்கு கொரோனா தொற்று... 

மாஸ்கோ
ஐரோப்பாவின் கொரோனா மையமாக உள்ள ரஷ்யாவில் இன்னும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. தினமும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 5,057 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 9.07 லட்சமாக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 124 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 384 ஆக உயர்ந்துள்ளது.

6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்த நிலையில், இதுவரை 7.16 லட்சம் பேர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளனர். இன்னும் 1.75 லட்சம் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் அந்நாட்டின் துணை பிரதமரான யூரி ட்ருட்னெவிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

;