tamilnadu

img

‘30 வயது முதல் 50 வயதுடையோர் பக்கவாதத்தால் பாதிக்கப்படும் அபாயம்’

கொரோனா பாதிப்பால் இந்தியா முற்றாக முடங்கியுள்ளது. கொரோனா-வுக்கு இன்னும் தடுப்பூசியோ, மருந்தோ கண்டுபிடிக்கப்படாத நிலையில் நோயாளிகளுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்தான உணவுகள், மாத்திரைகளை வழங்குவதன் மூலம் அவர்கள் காப்பாற்றப்படுகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் 111 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 வயது முதல் 60 வயதிற்குள் 1,600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 வயதிற்கு மேல் 226 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பிற்குள்ளான 30 வயது முதல் 50 வயதிற்குட்பட்டவர்களுக்கு உள்ளுறுப்புகள் பாதிக்கப் படும். ஸ்ட்ரோக்கால் மரணம் கூட ஏற்படலாம் என அமெரிக்க மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா வைரஸ்  நீரிழிவு நோய், இதயக்கோளாறு, சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட நீண்டகால நோய் பாதிப்புகள் இருப்போர், முதியோர் ஆகியோருக்குத்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும், அவர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் என்ற கருத்து நிலவி வந்தது. ஆனால் சமீபத்திய அமெரிக்க மருத்துவர்கள் ஆய்வில் 30 வயது முதல் 50 வயதுக்குள் இருப்போர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானால் உடலின் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும். சிலர் ஸ்ட்ரோக்கால்  எதிர்காலத்தில் உயிரிழப்பைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர்.  பகுப்பாய்வுகள், கொரோனா வைரஸ் நோயாளிகள் பெரும்பாலும் ஆபத்தான வகை பக்கவாதத்தை அனுபவிப்பதாகக் கூறுகின்றன.

கொரோனா வைரஸ் முதன்மையாக நுரையீரலைத் தாக்கும் ஒரு நோய்க்கிருமியாக கருதப்பட்டாலும் அது மிகவும் வலிமையான எதிரியாக மாறியுள்ளது.  இது உடலில் உள்ள ஒவ்வொரு முக்கிய உறுப்புகளையும்  பாதிக்கிறது.  பக்கவாதம் என்பது சிலரின் உடல் முழுவதும் கட்டிகளை  உருவாக்கும் ரத்தப் பிரச்சனைகளின் நேரடி விளை வாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள்  சந்தேகிக் கின்றனர்.

நியூயார்க் நகரின் தீயணைப்புத் துறையினரில் நோய்த்தொற்றின் உச்சத்தில் வீட்டிலேயே இறந்தவர்களை விட நான்கு மடங்கு சாதாரணமாக இறந்துவிட்டனர். இறந்த வர்களில் சிலர் திடீர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பல மருத்துவர்கள் கவலை தெரிவித்ததாக அந்த அறிக்கை கூறியுள்ளது. முழுமையாக உடற்கூராய்வு நடத்தப்பட்டதால் தான் உண்மை தெரியவரும்.

சீனாவின் வுஹானில் இருந்து ஒரு அறிக்கை வெளிவந்தது. அதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நோயாளிகளுக்கு பக்கவாதம் ஏற்பட்டதாக தெரிவித்திருந்தது. ஆகையால்  30 முதல் 50 வயதுக்குள் இருக்கும் வயதினர் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும், அவ்வாறு பாதிக்கப்பட்டாலும் தீவிர பரிசோதனை  செய்வது அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் பல மருத்துவமனைகளில் இளம் வயதினர் இந்த பாதிப்புகளை அடைந்துள்ளதால், கொரோனா வைரஸ் இதுபோன்ற புதிய பாதிப்புகளை ஏற்படுத்துமா என்று மருத்துவர்கள் குழப்பத்திலும் வியப்பிலும் உள்ளனர். 

இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் மருத்துவ மையத்தின் நரம்பியல் நிபுணர் எச்.ஒய். ஷோ கூறுகையில், “அமெரிக்காவைப் பொறுத்தவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஸ்ட்ரோக் வந்த இளம் வயதினர் சிலர்தான் இருக்கிறார்கள் என்றாலும், சீனாவின் வுஹான் நகரில் அனுமதிக்கப்பட்டிருந்த பல நோயாளிகளுக்கு திடீரென ஸ்ட்ரோக் ஏற்பட்டதும், பலர் அபாய கட்டத்துக்கு சென்றனர், பலர் உயிரிழந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த ஆய்வு செய்துவருகிறேன்” என்றார்.

நேஷனல் ஹெரால்டு இணையதள தகவல்களிலிருந்து

;