tamilnadu

img

புடின் ஆட்சியில் நீடிக்க பதவி விலகிய பிரதமர்

மாஸ்கோ,ஜன.17- ரஷ்ய ஜனாதிபதி விளாடி மிர் புடின்,தனது ஆட்சிக்காலத்தை நீட்டிக்கும் வகையில் அரசமைப்பில் சில மாற்றங்களை முன் மொழிந்த சிறிது நேரத்தில் அந்நாட்டின் பிரதமரும், அமைச் சர்களும் தங்கள் பதவியிலிருந்து விலகினர். இந்த அரசியலமைப்பு மாற்றங்கள் முறை யாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஜனாதிபதியின் அதிகாரங்கள் அனைத்தும் நாடாளுமன்றத்தி ற்கு மாற்றப்படும்.

2024ம் ஆண்டு புடினின் நான்காவது பதவிக் காலம் முடிவடைகிறது. இந்த அரசியலமைப்பு மாற்றத்தால் புடின் வேறொரு புதிய பொறுப்பு ஏற்கலாம் அல்லது மறைமுகமாக அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளலாம் என கூறப்படுகிறது. வருடாந்திர உரையில், புடின் தனது திட்டங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் விளக்கி கூறினார். பின்னர், இந்த மாற்றங்களை முன்னெடுக்க பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் தனது பதவியை ராஜி னாமா செய்வதாக அறிவித்தார்.

முன்னதாக, ஜனாதிபதியின் அதிகா ரங்களை நாடாளுமன்றத்திற்கு மாற்றுவது குறித்து நாடு முழுவதும் வாக்கெடுப்பு நடத்த வுள்ளதாக இரு நாடாளுமன்ற அமர்வு உறுப் பினர்களின் முன்னிலையிலும் புடின் விளக்கி கூறினார். தற்போதைய நடைமுறைப்படி ஜனா திபதி பிரதமரை நியமிப்பார். அந்த முடிவை நாடாளுமன்றத்தின் கீழவை உறுதி செய்யும். ஆனால் புடின் அறிவித்த மாற்றத்தின்படி பிரதமர் மற்றும் அமைச்சர்களை நியமிக்க, நாடாளுமன்ற கீழவைக்கு அதிக அதிகாரம் வழங்கப்படவுள்ளதாகவும் புடின் தெரிவித் தார். மாநில கவுன்சில் என்று அழைக்கப்படும் ஒரு ஆலோசனைக் குழுவிற்கு அதிக பொறுப்பு களை வழங்கவும் புடின் பரிந்துரைத்துள்ளார்.

;