tamilnadu

img

பாகிஸ்தானில் இந்து கோயில் வழிபாட்டிற்காகத் திறப்பு

லாகூர், ஜூலை 30- பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஆயிரம் ஆண்டு பழைமையான இந்து கோவில் நாடு பிரிவினைக்குப்பின் 72 ஆண்டுகள் கழித்து மக்களின் வழிபாட்டிற்காக முதன்முறையாக திங்கள் அன்று திறந்து விடப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதியில் லாகூரிலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில் தாரோவால் பகுதியில் சியால்கோட் என்னுமிடத்தில் ஷாவாலா தேஜா சிங் கோவில் உள்ளது. சியால்கோட் வரலாறு என்றும் புத்தகத்தின்படி இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஒன்றாகும். பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் புனிதக் கோவில்களை ‘வெளியேற்றப்பட்டவர்கள் அறக்கட்டளை சொத்து வாரியம்’ பராமரித்து வருகிறது.  மக்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த அறக்கட்டளை இக்கோவிலை மக்களின் வழிபாட்டிற் காகத் திறந்துவிட்டுள்ளது. பாபர் மசூதி இந்தியாவில் இடிக்கப்பட்ட சமயத்தில் இந்தக் கோவிலும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு அதன் ஒரு பகுதி சேதப்படுத்தப்பட்டது. அறக்கட்டளை இதனைச் சரிசெய்து இப்போது மக்களின் வழிபாட்டிற் காகத் திறந்து விட்டுள்ளது. அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி பாகிஸ்தானில் சுமார் 75 லட்சம் இந்துக்கள் வாழ்கிறார்கள். பாகிஸ்தா னில் உள்ள இந்துக்களில் பெரும்பகுதியினர் சிந்து மாகாணத்தில் வாழ்கிறார்கள்.  அவர்கள் தங்கள் கலாச்சாரம், பாரம்பர்யம் மற்றும் மொழியை அப்பகுதியில் வாழும் சக முஸ்லிம் மக்களு டன் பரஸ்பரம் பகிர்ந்து வாழ்ந்துவருகிறார்கள்.                                           (ந.நி.)

;