tamilnadu

img

குவாகாத்தி: தொலைக்காட்சி நிலையத்தில் போலீஸ் தாக்குதல்

குவாகாத்தி. டிச.14- மத்திய பாஜக அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் தீவிரமாகி வரும் நிலையில், உலுபரியில் உள்ள தொலைக்காட்சி அலுவலகத்துக்குள் அசாம் மாநில போலீசார் புகுந்து அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் கண்ட னம் தெரிவித்துள்ளன. குடியுரிமை சட்டம் அமல்படுத்தி யதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வட கிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் 2 பேர் கொல்லப் பட்டனர். நூற்றுக்கணக்கான போராட் டக்காரர்கள் காயமடைந்தனர். இந் நிலையில், சனியன்று ஆர்ப்பாட்டங் கள் நடைபெற்ற போது, அசாம் காவல்துறையினர் தனியார் தொலைக் காட்சி செய்தி பிரிவு அலுவலகத்திற் குள் நுழைந்து அதன் ஊழியர்களை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

முன்னதாக இந்த சம்பவம் நடை பெறுவதற்கு சுமார் 45 நிமிடங்களுக்கு முன்னர், காவல்துறையினர் ஆர்ப் பாட்டக்காரர்களை அடித்து கலைத்து விட்டு, அதன்பின் தொலைக்காட்சி நிலையத்திற்குள் நுழைந்து தாக்கு தல் நடத்தினர். இதுகுறித்து அந்த தொலைக்காட்சி நிர்வாக ஆசிரியர் ஸ்க்ரோல், ‘‘எந்த செய்தியும் தூண்டப்படவில்லை. அசாம் காவல்துறையிடம் நிபந்தனை யற்ற மன்னிப்பு கோருகிறோம்” என் றார்.  மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தனியார் தொலைக்காட்சி செய்தி சேனல்களுக்கு, ‘சட்டம் ஒழுங்குக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது தேச விரோத மனப்பான்மை யை ஊக்குவிக்கும் அல்லது தேசத்தின் ஒருமைப்பாட்டைப் பாதிக்கும் எதை யும் ஒளிபரப்பக் கூடாது’ என்று உத்தர விட்டிருந்தது. இந்நிலையிலேயே போராட்ட செய்திகளை ஒளிபரப்பியதற்காக உலுபரி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொலைக்காட்சி அலுவல கத்துக்குள் புகுந்து காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலை பல்வேறு அரசியல் கட்சி களும், அமைப்புகளும் கண்டித்துள்ளன.

டிச.18 இல் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக அசாம் மாணவர்கள் சங்கம் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசு ஊழியர்களும் வரும் 18 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடு பட போவதாக அசாம் அரசு ஊழி யர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து எச்சரிக்கை

இந்நிலையில்,  குடியுரிமை மசோதா நிறைவேற்றப்படுவதற்கு எதி ராக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன் முறைகள் பின்னணியில் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும். மேலும் அசா மிற்கான அதிகாரப்பூர்வ பயணத்தை தற்காலிகமாக நிறுத்துமாறும்  அமெ ரிக்கா தங்கள் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இங்கிலாந்து அரசு வெளியிட்ட அறிக்கையில், குடியுரிமை மசோதா விற்கு எதிராக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடக்கிறது. முக்கியமாக, வடகிழக்கு மாநிலங்க ளான அசாம் மற்றும் திரிபுராவில் வன்முறை இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்படலாம். கட்டாயம் பயணம் செய்ய வேண்டிய தேவை இருந்தால், சாத்தியமான பயணிகள் சமீபத்திய தகவல்களுக்கு உள்ளூர் ஊடகங்களை கண்காணிக்க வேண்டும். உள்ளூர் அதி காரிகள் வழங்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள் ளது.  இதேபோல் பிரான்ஸ், இஸ்ரேல் அரசுகளும், தனது நாட்டு குடிமக்களை கவனமுடன் இருக்கும்படி எச்ச ரித்துள்ளது.

;