tamilnadu

img

கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 6,526 ஆக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 6,518 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் உகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 6,526 ஆக உயர்ந்துள்ளது. 1,71,027 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 77,790 பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் 3,213 பேர் பலியாகி உள்ளனர், 80,879 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் 1,809 பேர் பலியாகி உள்ளனர், 24,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானில் 724 பேர் பலியாகி உள்ளனர், 13,938 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் 294 பேர் பலியாகி உள்ளனர், 7,988 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வட கொரியாவில் 75 பேர் பலியாகி உள்ளனர், 8,236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 69 பேரும் பலியாகி உள்ளனர், 3,802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில், கொரோனா வைரசால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோய் தொற்று காரணமாக கர்நாடகத்தில் ஒருவரும், தில்லியில் ஒருவரும் பலியாகி உள்ளனர். இன்று நிலவரப்படி, புதிதாக மகாராஷ்டிராவில் மேலும் 4 பேருக்கும், கேரளாவில் 2 பேருக்கும் கர்நாடகா மற்றும் ஒடிசாவில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 37 பேரும், கேரளாவில் 23 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 12 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

;