tamilnadu

img

பிரிட்டன்: மீண்டும் பிரதமராகிறார் போரிஸ் ஜான்சன்

பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. 
50 தொகுதிகளைக் கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 10 மணி வரை நடைபெற்றது. பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சிக்கும், ஜெரமி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. 
பெரும்பான்மைக்கு மொத்தம் 326 இடங்கள் தேவை என்ற நிலையில் இன்று காலை 5.30 மணியளவில் 628 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் 349 தொகுதிகளில் ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றிருந்தது. தொழிலாளர் கட்சி, 202 இடங்களை பிடித்திருக்கிறது.  
இதைத்தொடர்ந்து மீண்டும் போரஸ் ஜாக்சன் பிரதமராக உள்ளார்.
 

;