tamilnadu

img

மருந்து நிறுவனங்களுக்கு ரூ.74 கோடி அபராதம்

சந்தையில்  மருந்துகளை கட்டுப்படுத்தியதாலும், நிறுவனங்கள் இடையே போட்டியை முடக்கும் வகையிலும்  நடந்துகொண்ட 4 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் கூட்டமைப்புக்கு 74 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகப் போட்டிகளை ஊக்குவிக்கவும், முறைப்படுத்தவும் கொண்டுவரப்பட்ட போட்டியில், விதிகளை மீறியதற்காக இன்டாஸ் மருந்து நிறுவனத்திற்கு 55.5 கோடி ரூபாயும், ஹிமாலயா மருந்து நிறுவனத்திற்கு 18.5 கோடி ரூபாயும், மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த மருந்து நிறுவனங்கள் கூட்டமைப்புக்கு (MPCDA) 4 லட்ச ரூபாயும், இன்டோரை சேர்ந்த மருந்து நிறுவனத்தின் கூட்டமைப்புக்கு (ICA) 39 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மருந்து நிறுவனங்கள் மற்றும் கூட்டமைப்புகளின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த மற்ற மருந்து நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்கள்  அளித்த புகாரின் அடிப்படையில், வர்த்தக போட்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கான தேசிய ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.