tamilnadu

img

டெபாசிட்களுக்கு வட்டி உயர்த்துமா அரசு வங்கிகள்?

சென்னை:
ஏழை, எளிய, நடுத்தர, தொழிலாளர்கள் மற்றும் வயது முதியவர்கள் என பல தரப்பட்ட மக்கள், தாங்கள் கடினமாக உழைத்து ஈட்டிய வருவாயை சேமிப்பு மற்றும் நீண்ட கால வைப்பு தொகையாக பொதுத்துறை வங்கிகளில் முதலீடு செய்கின்றனர்.கடந்த பல ஆண்டுகளாக, மிகப் பெரிய மற்றும் சிறு நிறுவனங்கள், பல்வேறு காரணங்களுக்காக, தொழிலாளர்களை வெளி யேற்றும் (ஆட்குறைப்பு) நிலை உள்ளது.பணிக் காலத்தில் சிறுக சிறுக சேமித்து வைத்த வருங்கால வைப்பு நிதி, பணி ஒய்வு தொகை போன்றவற்றின் முலம் கிடைக்கும் சிறு தொகையை, பென்ஷன் இல்லாததால், மாத வட்டி பெறும் டெபாசிட்டில் முதலீடு செய்கிறார்கள்.

சமீபகாலமாக அரசு வங்கிகள், சிறு சேமிப்பு மற்றும் நீண்டகால டெபாசிட் தொகைக்கான வட்டியை அதிக அளவில் குறைக்கும் சூழ்நிலை உள்ளது.நாள்தோறும் விலைவாசி ஏறிக்கொண்டே செல்கிறது. உலக அளவில் வல்லரசு நாடுகளில் வங்கிகள் திவாலான சுழ்நிலையிலும் கூட, இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் இன்றளவும் திறம்பட செயல்பட, ஏழை-எளிய மக்களின் சேமிப்பு தொகையே காரணமாகும்.பொதுமக்களின் வைப்பு தொகை, அரசு வங்கிகளில், ஏறக்குறைய,  120 லட்சம் கோடியாகும். ஆண்டு தோறும், அரசுக்கு செலுத்த வேண்டிய  வருமான வரித் தொகையை, முறையாக செலுத்தி வரும், பொது மக்களுக்கு  அரசு வங்கிகள் சேமிப்பு மற்றும் நீண்டகால வைப்பு தொகைக்கு வழங்கும் வட்டியை அதிகரிக்க வேண்டும் வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் வலியுறுத்தி உள்ளனர்.

;