சென்னை, மே 8- ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 536 ரூபாய் அதிகரித்துள்ளது. ஊரடங்கு காரணமாக நகைக்கடைகள் மூடப்பட்டுள்ள போதிலும், ஆன்லைனில் தங்கம், வெள்ளி நகைகளை முன்பதிவு செய்து சிலர் வாங்கி வருகின்றனர். இதனால் அதற்கான விலையும் தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.சென்னையில் வியாழனன்று ஒரு கிராம் தங்கம் விலை 4 ஆயிரத்து 382 ரூபாயாக இருந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை 67 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 449 ரூபாயாக உயர்ந்துள்ளது.
வியாழக்கிழமை 35 ஆயிரத்து 56 ரூபாயாக இருந்த ஒரு சவரன் தங்கம் விலை வெள்ளிக்கிழமை 536 ரூபாய் உயர்ந்து, 35 ஆயிரத்து 592 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலையிலும் விலையேற்றம் நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.42.50 ஆக உயர்ந்துள்ளது. வியாழனன்று இதன் விலை ரூ.41.75 ஆக இருந்தது. ஒரு கிலோ வெள்ளி 42,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.