tamilnadu

img

மீண்டும் ஏற்றத்தில் தங்கம் விலை

சென்னை, நவ. 13- சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இந்தியாவில் தங்கத்தின் விலை அடிக்கடி மாறுபடுகிறது. செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.30 ஆயிரத்தைத் தாண்டியது. அதன்பிறகு ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில், புதனன்று ஒரு சவரனுக்கு 128 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 152 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 3644 ரூபாய்க்கு ஒரு கிராம் தங்கம் விற்பனையாகிறது.

;