சென்னை:
சென்னையில் வெள்ளியன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்குரூ. 240 குறைந்து, ஒரு சவரன் ரூ. 36,160-க்குவிற்பனையாகிறது.தங்கம் விலையில் சில நாட்களாகஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது.வியாழனன்று பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.36 ஆயிரத்து 400-க்கு விற்றது.
இந்த நிலையில் வெள்ளியன்று (ஜூலை 9) தங்கம் விலை குறைந்தது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.36 ஆயிரத்து 160-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.4 ஆயிரத்து 520 ஆக விற்பனையானது.வெள்ளி கிலோவுக்கு ரூ.700 குறைந்து ரூ.73 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.40-க்கு விற்கிறது. கடந்த மாதத்தில் தங்கம் விலையில் தொடர்ந்து சரிவு காணப்பட்டு பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. ஆனால் இந்த மாத
தொடக்கத்தில் விலை உயர்ந்து தங்கம் பவுன் மீண்டும் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.