இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 199 நாடுகளின் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,37,839 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 21,148 ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,658 ஆக உள்ளது; பலி எண்ணிக்கை 578 ஆக உள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வீடியோ ஒன்றை போரிஸ் ஜான்சன், அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.