tamilnadu

இந்நாள் நவம்பர் 17 இதற்கு முன்னால்

1588 - முதலாம் எலிசபெத் அரசியானதைத் தொடர்ந்து, ஆயிரம் ஆண்டுகால இங்கிலாந்து வரலாற்றின் மிகச்சிறந்த காலம் என் றும், இங்கிலாந்தின் பொற்காலம் என்றும் குறிப்பிடப்படும் எலிச பெத்திய காலம் தொடங் கியது. ஆங்கிலேய சீர்திருத்தத் தின் நாயகி என்று குறிப்பிடப்படும் ஆன் பூலினின் மகள்தான் எலிசபெத். எலிசபெத்துக்கு இரண் டரை வயதானபோது,  மரண தண்டனை வழங்கப்பட்டு ஆன் பூலின்கொல் லப்பட்ட செய்தி இத்தொடரில் 2019 மே 19இல் உள் ளது. திருமணமே செய்து கொள்ளாத அரசி என்ற வகையி லும் ஆங்கிலேய வரலாற்றில் எலிசபெத் புகழ்பெற்ற வர். முந்தைய, பிந்தைய ஆட்சிகளில் காணப்பட்ட மத, அரசியல் பிரச்சனைகளின்றி, இவர் காலத்தில் இங்கி லாந்தில் தற்காலிக அமைதி நிலவியது. திருத்தந்தை(போப்) தலைமையிலான ரோமன் கத்தோலிக்க திருச்சபைக் கும், சீர்திருத்த(ப்ராட்டஸ்டண்ட்) திருச்சபைக்குமிடை யேயான சிக்கல்களுக்கு இவர் அளித்த தீர்வு, எலிச பெத்திய தீர்வு என்றழைக்கப்படுவதுடன், சுமுகமான  நிலையையும் ஏற்படுத்தியது. 1588இல் ஸ்பெயினின்  கடற்படைக் கப்பலணியின் தாக்குதலை முறிய டித்தது ஆங்கிலேய வரலாற்றின் மிகப்பெரிய வெற்றிக ளுள் ஒன்றாக இன்றும் குறிப்பிடப்படுகிறது. அயர் லாந்தின் கத்தோலிக்கர்களுக்கு ஆதரவாகவே ஸ்பெயினின் இரண்டாம் ஃபிலிப் இங்கிலாந்தின்மீது போர் தொடுத்ததால், இந்த வெற்றிக்குப்பின், சீர்திருத்தத் திருச்சபைக்கான மக்கள் ஆதரவும் வலுப்பெற்றது. முடியரசுக்கும், நாடாளுமன்றத்துக்குமான முரண்பாடு களும் இவர் காலத்தில் அமைதியடைந்திருந்தன. இவர் காலத்தில், ஷேக்ஸ்பியர் உள்ளிட்டவர்களால் ஆங்கிலேய நாடக இலக்கியம், பழைமைகளை உடைத்தெ றிந்து மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியதே, ஆங்கிலேய இலக்கிய மறுமலர்ச்சியின் தொடக்கமாகக் குறிப்பிடப்படு கிறது. அமெரிக்கக் கண்டத்தில் ஸ்பெயின் நிரந்தரக் குடி யேற்றங்களை ஏற்கெனவே நிர்மாணித்திருந்தது டன், ஸ்பெயினுடன் இணைந்து, போர்ச்சுக்கல்லும் ஆசியா, தென்அமெரிக்கா, ஆஃப்ரிக்காவிலும், பிரான்ஸ்  அமெரிக்காவிலும் குடியேற்றங்களை உருவாக்க முயன்று கொண்டிருந்தன. எதிரியான ஸ்பெயினின் துறைமுகங் களை ஆங்கிலேயர்கள் கொள்ளையிட அனுமதித்திருந்த எலிசபெத், இங்கிலாந்தும் கடல்கடந்த பேரரசை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனுமதியளித்ததைய டுத்தே அமெரிக்கா தொடங்கி, உலகம் முழுவதுமான ஆங்கிலேயக் குடியேற்றங்களும், ஆக்கிரமிப்புகளும் உருவாயின. 1600இல் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக் கான அனுமதியையும் இவர்தான் வழங்கினார்! கடல்கடந்த வணிகம், ஸ்பெயினிடமிருந்து தொடர்ச்சியாகக் கொள்ளை யிடப்பட்டவை ஆகியவற்றால் இவர் கால இங்கிலாந்து செழிப்பாக இருந்தாலும், 14-17 நூற்றாண்டுகளில் ஐரோப்பாவைத் தாக்கிய கருப்புச்சாவு, இவரது ஆட்சி யிலும் 1563,1589,1603 ஆண்டுகளில் பெரும் உயிரிழப்பு களை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இவர் காலத்தின்  பெருமைகளைக் குறிக்கவே, பிரிட்டன் என்பதை பிரிட் டானியா என்ற பெண்ணாகக் குறிப்பிடும் வழக்கம் தொடங் கியது.