tamilnadu

img

ஆஸ்திரேலியாவில் 2வது முறை பிரதமராக பதவியேற்றார் ஸ்காட் மோரிசன் 

ஆஸ்திரேலியாவின் பிரதமராக 2வது முறையாக ஸ்கார்ட் மோரிசன் பதவியேற்றுக்கொண்டார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமராக இருந்த மால்கம் டர்ன்புல்லுக்கு மூத்த அமைச்சர்கள்  எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அவரது பெரும்பான்மையை நிரூபிக்க எம்பிக்களின் வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஸ்காட் மோரிசன் வெற்றியடைந்து பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து தற்போது நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 150 தொகுதிகளில் 77 இடங்களில் சுதந்திரா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றிபெற்றனர். ஆட்சியைப் படிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தொழிலாளர் கட்சி 68 இடங்களில் வெற்றிபெற்றன.மேலும் உள்ள 6 இடங்களில் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்
இதையடுத்து  தலைநகர் கான்பராவில் ஸ்காட் மோரிசன்  இன்று பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். அவருடன்  துணை பிரதமராக மைக்கேல் மெக்கார்மாக்கும் பதவியேற்றுக்கொண்டார். ஆஸ்திரேலிய அமைச்சரவையில் 7 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைச்சராக சூசன்லே பதவியேற்றார்.

;