1. வெற்றிக் களிப்பில் பாராசைட் திரைப்படக் குழுவினர்
திரையுலகின் மிகஉயரிய விருதான ஆஸ்கர் விருது கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டிற்கான 92-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஞாயிறன்று இரவு (இந்திய நேரப்படி திங்களன்று) நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் தென் கொரிய படமான பாராசைட் திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த சர்வதேச ஃபீச்சர் பிலிம், ஒரிஜினல் திரைக்கதை என்று 4 விருதுகளை தட்டிச் சென்றது. இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ஆங்கிலம் அல்லாத பிற மொழி படம் சிறந்த படத்திற்கான விருதை பெறுவது இதுவே முதல் முறை என்ற வரலாற்றை பாராசைட் படைத்துள்ளது. அது மட்டும் அல்ல ஆஸ்கர் விருதுக்கு இதுவரை எந்த ஒரு தென் கொரியப் படமும் பரிந்துரைக்கப்பட்டது கூட இல்லை. பாரசைட் தான் முதல் முறையாக பங்கேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2. ஆஸ்கர் விருதுகள் விபரம்
சிறந்த படம் - பாராசைட்(கொரியன்)
சிறந்த நடிகர் - ஜாக்குயின் பீனிக்ஸ்(ஜோக்கர்)
சிறந்த நடிகை - ரெனீ ஜெல்வேகர்(ரூடி)
சிறந்த இயக்குநர் - போங் ஜூன் ஹோ(பாராசைட்)
சிறந்த துணை நடிகர் - பிராட் பிட்
(ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்)
சிறந்த துணை நடிகை - லாரா டெர்ன்(மேரேஜ் ஸ்டோரி)
3. ஃபோர்டு வெர்சஸ் ஃபெராரி
சிறந்த திரைக்கதை - பாராசைட்
சிறந்த தழுவல் திரைக்கதை - ஜோஜோ ராபிட்
சிறந்த ஒளிப்பதிவாளர் - 1917
சிறந்த படத்தொகுப்பாளர்- ஃபோர்டு வெர்சஸ் ஃபெராரி
சிறந்த பின்னணி இசை - ஜோக்கர்
சிறந்த பாடல் - ராக்கெட் மேன்
சிறந்த ஒப்பனை - பாம்ஷெல் திரைப்படம்
சிறந்த ஆடை வடிவமைப்பு - லிட்டின் வுமன்
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - 1917
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - ஒன்ஸ் அபான் ஏ டைம்
சிறந்த ஒலி படத்தொகுப்பு - ஃபோர்டு வெர்சஸ் ஃபெராரி
சிறந்த ஒலி கோர்ப்பு - மார்க் டெய்லர் (1917)
சிறந்த ஆவணப்படம் - அமெரிக்கன் பேக்டரி
சிறந்த வெளிநாட்டு படம் - பாராசைட் (கொரியன்)
சிறந்த அனிமேஷன் திரைப்படம் - டாய் ஸ்டோரி-4
சிறந்த அனிமேஷன் குறும்படம் - ஹேர் லவ்
சிறந்த ஆவண குறும்படம் - லேர்னிங் டு ஸ்கேட்போர்ட் இன் ஏ வார்ஜோன்
சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம்-தி நெய்பர்ஸ் விண்டோ
4. டாப் 3
- கடந்த ஆண்டை போலவே நடப்பாண்டு ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா தொகுப்பாளர் இன்றி நடைபெற்றது. தொகுப்பாளர் இல்லாமல் தொடர்ந்து 2 ஆண்டுகள் நடந்ததால் பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. அதாவது ஆஸ்கர் விழா சுவாரஸ்யமின்றி நகர்ந்து வருகிறது.
- ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் 5 படங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட விருதுகளை அள்ளியுள்ளன. பாராசைட் படம் 4 விருதுகள், 1917 படம் 3 விருதுகள், ஒன்ஸ் அப் ஆன் டைம் இன் ஹாலிவுட் - 2 விருதுகள், போர்டு வெர்சஸ் பெராரி - 2 விருதுகள், ஜோக்கர் - 2 விருதுகளை வென்றுள்ளன.
- குடும்ப பின்னணி கதை எனக்கூறப்படும் பாரசைட் திரைப்படம் 6 பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த திரைப்படம் தொடக்கத்தில் அவ்வளவாக சாதிக்கவில்லை. கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் முதன்முதலில் திரையிடப்பட்ட பொழுது தான் இந்த படத்தின் புகழ் மலை உச்சிக்கு சென்றது.