அரியானா காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் விகாஸ் சவுத்ரி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரியானா மாநிலம் ஃபரிதாபாத் பகுதியில் செக்டர் 9 இல் வசிக்கும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் விகாஸ் சவுத்ரி, இன்று காலை உடற்பயிற்சி நிலையத்திலிருந்து வெளியே வந்த சிறிது நேரத்திலேயே அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு ஆளானார். அவர் காரில் ஏறிய சிறிது நேரத்தில் மற்றொரு வாகனம் பின்னால் இருந்து நகர்ந்து, அதில் இருந்து இரண்டு பேர் வெளியேறி, சவுத்ரியின் வாகனத்தின் முன்புறம் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து சவுத்ரி உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஃபரிதாபாத் உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கி பல சி.சி.டி.வி.களின் காட்சிகளை திரையிட்டு வருகின்றனர்.