உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு வாக்குமூலம்
கொச்சி, நவ. 9- அட்டப்பாடியில் மாவோ யிஸ்ட்டுகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டை எதிர் கொண்டதாக கேரள உயர் நீதிமன்றத்தில் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 2004 பிப்ரவரியில் ஒடிசா வில் கோராபுத் மாவட்டத்தி்ல் ஆயுத சேமிப்பில் மாவோ யிஸ்ட்டுகள் ஈடுபட்டனர். ஏ.கே.47 துப்பாக்கிகள் குண்டுகளை பறித்துக் கொண்டனர். அதை பயன் படுத்தியே மாவோயிஸ்ட்டு கள் தாக்குதல் நடத்தினர் என மூத்த வழக்கறிஞரும் பிளீடருமான சுமன் சக்ர வர்த்தி குறிப்பிட்டார். கொல்லப்பட்ட மணிவாச கத்தின் சகோதரி லட்சுமியும் கார்த்தியின் சகோதரன் முரு கேசனும் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் இந்த விளக்கம் அளிக்கப் பட்டது. மோதலில் உயிரி ழந்ததாக உடற்கூறா ய்வு சான்று தெளிவுபடுத்தி யுள்ளது. மணிவாசக்தின் காலில் முறிவு ஏற்பட்டது உயரமுள்ள இடத்திலி ருந்து தாழ்வான பகுதிக்கு தாவியதால் ஏற்பட்டிருக்க லாம். கையில் ஏற்பட்ட முறிவு துப்பாக்கி பிடித்துக்கொண்டி ருந்தபோது ஏற்பட்டது. இவர்கள் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது மிக அருகி லிருந்தல்ல. தாக்குதலை எதிர் கொள்ளவு தண்டர் போல்ட் துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளது. துப்பாக்கி சூடு நடந்தபோது எடுத்த புகைப்படங்கள் காவல்துறையிடம் உள்ளது. அனைத்து விவரங்களும் காவல்துறையின் குறிப்பில் (டைரி) உள்ளதாகவும் அவர் கூறினார். உடற்கூறாய்வு அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசார ணையை நவம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி தீர்ப்பு கூறும்வரை மாவோயிஸ்ட்டுகளின் உடல்களுக்கு இறுதி நிகழ்ச்சி நடத்தக்கூடாது எனவும் உத்தரவிட்டார்.