தூத்துக்குடி, ஏப்.8- மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் காயல்பட்டணம் அரசு மருத்துவ மனை தற்காலி கமாக மூடப் பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த ஏராள மானோருக்கு கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத் தில் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தை சேர்ந்த 2 பேர் கொரோனா நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் காயல்பட்டணம் அரசு மருத்துவ மனையில் மருத்துவராக பணி யாற்றி வருகிறார். மற்றொருவர் அவரது நண்பர். மருத்துவர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவுடன் அவர்களது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப் பட்டனர். சுகாதாரத்துறையினரின் தொடர் கண்காணிப்பில் உள்ள னர். மேலும் மருத்துவர் மற்றும் அவரது நண்பர் வீடு உள்ள காயல்பட்டணம் தெருக்கள் அடைக்கப்பட்டன. அந்த தெரு வில் உள்ளவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா பாதித்த மருத்து வர் காயல்பட்டணம் அரசு மருத்து வமனையில் பணிபுரிந்ததால் அவரிடம் சிகிச்சை பெற வந்த வர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தள்ளது. இதனால் அந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்றவர்கள் தாமாக முன்வந்து மருத்துவ பரி சோதனை செய்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி யுள்ளது. 2 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதால் காயல்பட்டணத்தில் சுகா தார பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. மருத்துவர் மற்றும் அவரது நண்பரின் குடும்பத்தி னர், உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த வர்கள் என 200 குடும்பத்தினர் அடையாளம் காணப்பட்டுள்ள னர். அந்த குடும்பத்தினர் அனை வரும் தனிமைபடுத்தப்பட்டு சுகா தார துறையினரால் கண்கா ணிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் காயல்பட்ட ணம் அரசு மருத்துவமனையில் சுகாதார துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த மருத்து வமனையை தற்காலிகமாக மூட முடிவெடுத்தனர். அதன்படி அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டு வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். அதன்பிறகு காயல்பட்டணம் அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் மற்றும் தீய ணைப்பு துறையினரால் முழுவது மாக கிருமிநாசினி தெளிக்கப் பட்டு சுத்தப்படுத்தப்பட்டது.
இதையடுத்து காயல்பட்ட ணம் அரசு மருத்துவமனை தற் காலிகமாக மூடப்பட்டது. அங்கு யாரும் சிகிச்சை பெற வந்தால் சிகிச்சை அளிக்க வசதியாக மருத்துவமனைக்கு வெளியே ஒரு வாகனத்தில் நடமாடும் மருத்துவமனை நடத்தப்படு கிறது. அதில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவ பணியாளர் ஆகிய 3 பேர் பணி யில் உள்ளனர்.