tamilnadu

img

சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் புகாரில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

  அரியலூர், நவ.5- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் அங்கராய நல்லூர் ஊராட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப் பட்ட ஆழ்துளைக் கிணற்றில் மோட்டார் பொருத்தி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு பயன்பாட்டிற்காக மாற்றப்பட்டது. குறிப்பிட்ட நாட்களில் தொட்டியில் பழுது ஏற்பட்டதால் மோட்டாரில் இருந்து நேரடி யாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது இந்த சூழலில் தற்போதும் அதே நிலை தான் நிலவி வருகிறது. ஆண்டுகள் பல ஆகியதன் காரண மாக போரின் தன்மை மாறி 10 லிட்டர் தண்ணீர் பிடித்து சென்றால் 50 கிராம் மணல் தண்ணீரில் கலந்து வருகிறது. அதையே பொது மக்கள் குடிநீராக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.  ஆழ்துளைக் கிணறும் அதன் அருகில் தண்ணீர் பிடிக்க பைப்பும் அமைக்கப்பட்டுள்ளது. அதில் சிந்தும் தண்ணீர் அப்படியே கிணற்றுக்குள் செல்கிறது. மழை தண்ணீரும் தரையோடு தரையாக கிணறு இருப்பதால் மழை நீர் கிணற்றுக்குள் தொடர்ந்து சென்று கொண்டு தான் இருக்கிறது. இதனால் பல்வேறு நோய்த் தொற்றுகள் ஏற்படுவதற்கு முன்பு ஊராட்சி செயலாளர், ஊராட்சி ஒன்றிய ஆணையர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் சரி செய்ய கோரி மக்கள் புகார் அளித்தும் எந்த விதமான மாற்று ஏற்பாடும் செய்யப்படவில்லை. இதனை சரி செய்ய வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;