அரியலூர்: தா.பழூர் கிழக்கு ஒன்றியத்தில் பேரறிஞர் அண்ணாநினைவு நாளை முன்னிட்டு தா.பழூர் மற்றும் இடங்கண்ணி கிராமத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு க.சொ.க. கண்ணன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் ஆர்.கண்ணையன், காங்கிரஸ் வட்டார தலைவர் க.சக்கர வர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் எஸ்.அபிமன்னன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், வி.சி.க ஒன்றியசெயலாளர் பி.தங்கராசு, பொதுக்குழு உறுப்பினர் இரா.அண்ணாதுரை, மாவட்ட விவசாய தொழிலா ளரணி அமைப்பாளர் என்.ஆர்.இராமதுரை, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.