உலகளவில் அதிகமாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள நாடாக, அமெரிக்கா உள்ளது.
சீனாவின் உகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இந்த வைரஸ் 199 நாடுகளுக்கு பரவி உள்ளது. உலக முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,33,015 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 24,095 ஆக உள்ளது. இந்த உலகளவில் அதிகமாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள நாடாக, அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 15,461 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 85,604 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 1,301 ஆக அதிகரித்துள்ளது.