tamilnadu

img

அமெரிக்காவில் கருப்பின வாலிபர் போலீசாரால் சுட்டுக்கொலை மீண்டும் வெடித்தது போராட்டம்

வாஷிங்டன், ஜூன் 14-  அமெரிக்காவில் கருப்பின மக்களு க்கு எதிராக போலீசாரின் தொடரும் அட்டூழியமாக மற்றொரு கருப்பின வாலிபர் போலீசாரால் சுட்டுக் கொல்லப் பட்டார். இதனால் அந்நாட்டில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜார்ஜ் பிளாயிட் என்ற கருப்பின வாலிபரை  போலீஸ்காரர் ஒருவர் தனது கால் முட்டியால் அழுத்தினார்.இதில் அந்த கருப்பின வாலிபர் மூச்சுவிட முடி யாமல் திணறி உயிரிழந்தார்.   போலீ சாரின் நிறவெறிறைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டங்கள் ஐரோப்பிய நாடுகளிலும் பரவின.   இந்நிலையில் அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் வென்டி என்ற உணவகத்தின் வெளியே படுத்திருந்த 27 வயது கருப்பின வாலிபர் ரேஷார்ட் புரூக்ஸ் என்பவரை போலீசார் விசார ணைக்கு அழைத்துள்ளனர். ஆனால் அவர் வர மறுத்து, அங்கிருந்து சென்றுள் ளார். இதனால் ஆத்திரமடைந்த போலீ சார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் கொல்லப்பட்டார்.  இதுபற்றிய வீடியோ வும் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.  இத னால் அந்நாட்டில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.  இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரி காரெட் ரோல்ப் பணி யில் இருந்து நீக்கப்பட்டார்.  காவல் துறை உயரதிகாரி எரிக்கா ஷீல்ட்ஸ் தனது பணி யில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

;