கூகுள் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சைக்கு குளோபல் லீடர்ஷிப் விருது அறிவிக்கப்பட்டுள்ளது..
வர்த்தக ரீதியாக சிறப்பான பங்காற்றும் அமெரிக்க மற்றும் இந்திய பெரு நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு அமெரிக்க - இந்திய வர்த்தக சபை கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் குளோபல் லீடர் ஷிப் விருதுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் 2019-ஆம் ஆண்டுக்கான குளோபல் லீடர்ஷிப் விருது கூகுள் தலைமைச் செயலதிகாரியும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான சுந்தர் பிச்சைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.