tamilnadu

img

சாலையில் தரையிறங்கி சிக்னலில் நின்ற விமானம்

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் சிறிய ரக விமானம் ஒன்று போக்குவரத்து மிக்க சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டு சிக்னலில் நின்ற வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

வாஷிங்டன் நகரில் காவல் அதிகாரி ஒருவர் சென்று கொண்டிருந்த காருக்கு மேலே விமானம் ஒன்று குறைந்த உயரத்தில் பறந்து சென்றுள்ளது. ஒரு ஆள் மட்டுமே பயணிக்கக்கூடிய கே.ஆர் 2 ரக விமானம் ஒன்று, வாகனங்கள் சென்று கொண்டிருந்த சாலையில் தரையிறக்கப்பட்டு, சிக்னலில் நின்றது.

இந்த விமானத்தில் இருந்து இறங்கிய விமானியிடம் விசாரித்ததில், விமானத்தின் எரிபொருள் அமைப்பில் ஏற்பட்ட கோளாறால் காரணமாக அவசர அவசரமாக தரையிறக்கியதாக காவல் அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். காவல் அதிகாரியின் காரில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவான இந்த காட்சிகள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளன.
 

;