tamilnadu

img

பூமியின் அளவிலான 18 கோள்கள் கண்டுபிடிப்பு

சூரிய குடும்பத்திற்கு வெளியே பூமியின் அளவிலான 18 கோள்களை நாசா விண்வெளி ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா சூரிய குடும்பத்தின் அருகே உள்ள விண்மீன்களை சுற்றிய பூமியின் அளவிலான கோள்களை கண்டறிய பிரத்யேகமாக கெப்லார் விண்வெளி தொலைநோக்கியை பயன்படுத்தி வருகிறது. இதன்மூலம் தற்போதுவரை சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமான கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தற்போது சூரிய குடும்பத்திற்கு வெளியில் உள்ள புதிதாக 18 கோள்களை இந்த தொலைநோக்கி மூலம் நாசா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இதில் ஒரு கோள் பூமியின் அளவில் வெறும் 69 சதவிகிதத்துடன் மிகச்சிறிய அளவிலானது எனவும், மற்றொன்று பூமியின் விட்டத்தைப் போன்று இருமடங்கு பெரியது எனவும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கெப்லார்-62e என பெயரிடப்பட்டுள்ள மற்றொரு கோளில் பூமியை போன்று தரை அல்லது நீர் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

;