tamilnadu

img

அமெரிக்கா: கொரோனா பாதிப்பால் 11 இந்தியர்கள் பலி

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 11 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். 

சீனாவின் உகானில் தொடங்கிய கொரோனா இன்று உலகில் உள்ள சுமார் 200 நாடுகளில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் வல்லரசு நாடான அமெரிக்கா  செய்வதறியாது தவித்து வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அமெரிக்காவில் தான் அதிக அளவில் காணப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில், 435,128 பேருக்கு கொரோனா பாதிப்பு காணப்படுகிறது. கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் மட்டும் 14,795-பேர் பலியாகியுள்ளனர்.  இந்நிலையில் கொரோனா பாதிப்பால், அமெரிக்காவில் வசித்து 11 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 16 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  அமெரிக்காவில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்த அனைத்து இந்தியர்களும் ஆண்களே ஆவர். இவர்களில்  4 பேர் டாக்ஸி ஓட்டுநராக அமெரிக்காவில் பணிபுரிந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.