tamilnadu

img

அனைத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே என் இலக்கு... சிபிஎம் வேட்பாளர் பிரஜ் தேகா வாக்குறுதி

கவுகாத்தி, ஏப்.7-

அச்சத்தின் பிடியில் இருக்கும் மக்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஊட்டுவதே தனது முதன்மைப் பணியாக இருக்கும் என்று, அசாம் மாநிலம் கோக்ரஜார் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பிரஜ் தேகா கூறியுள்ளார். 25 வயதேயான பிரஜ் தேகா,தற்போது தேர்தல் களம் காணும்வேட்பாளர்களில் மிகவும் இளமையானவர் ஆவார். ‘போடோ’ இனமக்கள் அதிகமாக வாழும் கோக்ரஜார் தொகுதியிலிருந்து மக்களவைக்கு இவர் போட்டியிடுகிறார். இந்திய மாணவர் சங்கத்தின் அசாம்மாநில துணைத் தலைவராக இருக் கும் பிரஜ் தேகா, போடோலேண்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் தான் முன்வைக்கும் விஷயங்கள் குறித்து, செய்தியாளர்களிடம் தேகா பேசியுள்ளார். அதில், “கோக்ரஜார் தொகுதி மக்களுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வேன்; மக்கள் மனதில் அச்சம் நிலவுகிறது; அதைக்களைந்து பாதுகாப்பு உணர்வை ஊட்ட வேண்டியது முக்கியமாகும்; அந்த வகையில், அனைவருக்கும் பாதுகாப்பை ஏற்படுத்தித் தருவது என்பதே எனது முதன்மையான பணியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். இளம் வேட்பாளர் என்றஅம்சம், கோக்ரஜார் வாக்காளர்கள் மத்தியில் பிரஜ் தேகாவிற்குநல்ல ஆதரவை ஏற்படுத்திக் கொடுத் திருக்கிறது. அசாம் மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு தொகுதிகளில்போட்டியிடுகிறது. மற்றொரு தொகுதியான லகிம்பூரில் அமியகுமார் ஹாண்டிக் களமிறங்கியுள்ளார். 

;