tamilnadu

img

ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

ஏற்காடு, செப். 12- ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித் துள்ளதால் சுற்றுலாவை நம் பியுள்ள சாலையோர வியா பாரிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். சேலம் மாவட்டம், ஏற் காடு தமிழகத்தின் பிரதான சுற்றுலா தலங்களில் ஒன்றா கும். கொரோனா ஊரடங்கி னால் ஏற்காடு முற்றிலும் முடங்கியிருந்தது.

இந்நி லையில், தமிழக அரசு பல்வேறு தளர்வு களை அறிவித்துள்ளது. குறிப்பாக, சுற்றுலா தலங்களை திறக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, ஏற் காட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் திறக்கப் பட்டன. இதனால், ஏற்காட்டிற்கு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி கள் வருகை தர துவங்கியுள்ளனர்.

ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம் மற்றும் லேடீஸ் சீட், சில்ட ரன்ஸ் சீட், ஜென்ட்ஸ் சீட் உள்ளிட்ட வியூ பாயின்ட்களை சுற்றி பார்த்தும், ஓய்வெ டுத்தும் செல்கின்றனர். மேலும், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.