இன்றைய ஆட்டம்
பாகிஸ்தான் -தென் ஆப்பிரிக்கா
இடம் : லார்ட்ஸ் (லண்டன்)
நேரம் : பிற்பகல் 3 மணி
வெற்றி 50% - 50% வாய்ப்பு
இரு அணிகளும் சமபலத்தில் இருப்பதால் வெற்றி, தோல்வி எளிதாகக் கணிக்கமுடியாது. ஆனால் இந்த ஆட்டம் பாகிஸ்தான் அணிக்கு மிக முக்கியமானதாகும். உலகக்கோப்பை தொடரில் 5 ஆட்டங்களில் விளை யாடியுள்ள பாகிஸ்தான் அணி ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்று, 3 தோல்வி, ஒரு டை என மொத்தம் 3 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு குறித்துச் சிந்திக்க முடியும். தென் ஆப்பிரிக்கா அணி ஏற்கெனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டதால் பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டம் அந்த அணிக்கு வெறும் சம்பிரதாயம் தான். இருப்பினும் ஆறுதல் வெற்றி க்கு பாகிஸ்தான் அணியை இரையாக்க தென் ஆப்பிரிக்க அணி காத்துக்கொண்டிருப்பதால், பாகிஸ்தான் அணி கழுகுப் பார்வையுடன் விளையாடுவது நல்லது.
அரையிறுதிக்குச் செல்லும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும், ஆறு தலுக்காகப் பாகிஸ்தானைப் பந்தாடும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா அணியும் என இரு அணிகளும் வெற்றிக்காக வரிந்துகட்டுவதால் லார்ட்ஸ் போட்டி பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழை 15% வாய்ப்பு
இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் மழை குறைந்து வெயில் அடிக்க ஆரம்பித்துவிட்டது. வளிமண்டல சுழற்சி காரணமாக அவ்வப் போது மேகக்கூட்டம் திரள்கின்றன. மாலை நேரங்களில் குளிர்ந்த காற்று பலமாக வீசினால் லேசாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆடுகளம் எப்படி?
நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரில் லார்ட்ஸ் மைதா னத்திற்கு இது முதல் ஆட்டம். பந்துவீச்சுக்கு ஏற்றது. ஸ்விங் நன்றாகச் செயல்படும். பந்துவீச்சைக் கவனமாக ஆராய்ந்தால் ரன் வேட்டை நிகழ்த்தலாம்.