இன்றைய ஆட்டம்
இங்கிலாந்து - இலங்கை
இடம் : லீட்ஸ்
நேரம் : பிற்பகல் 3 மணி
வெற்றி 60% - 40% வாய்ப்பு
இரு அணிகளையும் ஒப்பிடுகையில் இங்கிலாந்து அணி சற்று பலமாக இருப்பதால் இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அணி இங்கிலாந்து மண்ணிற்கு அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் ஆடுகளத்தின் தன்மையை நன்கு அறிந்து வைத்துள்ளது.இது இங்கிலாந்து அணிக்குச் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என்பதில் எவ்வித சந்தேகமில்லை.
மழை 20% வாய்ப்பு
லீட்ஸ் நகர வானிலை நிலவரப்படி வெள்ளியன்று மழை பெய்ய வாய்ப்புகள் குறைவு என்றாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
ஆடுகளம் எப்படி?
நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரில் லீட்ஸ் மைதானத்துக்கு இது முதல் போட்டியாகும். வேகம், சுழல் சரிசமமாக எடுபடும். ஸ்விங் பந்துவீச்சின் தாக்கம் அதிக மாக இருக்கும். ஆடுகளத்தின் பரப்பளவு சிறியதாக இருப்ப தால் பேட்ஸ்மேன்களுக்கு குஷியை உருவாக்கும்.