இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் காயமடைந்ததை அடுத்து, ரிஷப் பண்ட் அவருக்கு மாற்று வீரராக இங்கிலாந்து செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலகக்கோப்பை தொடரில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில், இந்திய துவக்க வீரர் தவானின் இடது பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ‘பீல்டிங்’ செய்ய வரவில்லை. இதையடுத்து அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில், எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் அவர் மூன்று வாரங்கள் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஷிகர் தவான் தொடரில் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டது.
முன்னதாக இந்திய அணிக்கு ‘பேக் அப்’ வீரர்களாக ரிஷப் பண்ட், அம்பதி ராயுடு ஆகியோர் அறிவிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் தவானுக்கு பதில் மாற்று வீரராக ரிஷப் பண்ட் உடனடியாக இங்கிலாந்து கிளம்பி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.