tamilnadu

img

உலகக் கோப்பை 2019 : டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில், வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடுகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் குல்தீப் யாதவ் மற்றும் கேதர் ஜாதவுக்கு பதிலாக புவனேஷ் குமார் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர். 

உலகக் கோப்பை தொடரில், இந்தியா அணி 7 போட்டிகளில் மொத்தம் 11 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது இந்தியா.  இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால், ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக இந்திய அணி அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும்.