tamilnadu

img

தோழர் கே.தங்கவேலுக்கு புகழஞ்சலி

விருதுநகர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவரது மறைவிற்கு கட்சியின் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் - புறநகர் மாவட்டகுழுக்கள் சார்பில் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் என்.நன்மாறன், மாநிலச்செயற்குழு உறுப்பினர்கள் ஏ.லாசர், மதுக்கூர் இராமலிங்கம், மாநகர் மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா மற்றும் மாவட்டச்செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

விருதுநகர்
விருதுநகரில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன், வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.முத்துவேலு, நகர் தலைவர் எல்.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.பாண்டி, எம்.கார்மேகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

திண்டுக்கல்
திண்டுக்கல்மாவட்ட குழு அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் மாநிலக் குழு உறுப்பினர்கள் கே பாலபாரதி,என் பாண்டி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே ஆர் கணேசன், பிரபாகரன், ஆசாத்அஜய் கோஸ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வ.கல்யாணசுந்தரம், வனஜா, ஜானகி,சிபிஐ மாவட்டச் செயலாளர் மணிகண்டன், ஜெயமணி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.பழனியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில்மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் அருள்செல்வன், கமலக்கண்ணன், நகர் செயலாளர் கந்தசாமி, குருசாமி களஞ்சியம் ஆகியோர் பங்கேற்றனர்.பாளையத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி செல்வராஜ், ஒன்றிய செயலாளர் ராஜரத்தினம், எரியோட்டில் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் முத்துச்சாமி, ஒன்றியச் செயலாளர் முனியப்பன், ஒட்டன்சத்திரத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வசந்தாமணி, எம்.ஆர்.முத்துசாமி, ஒன்றியச் செயலாளர் சிவமணி, வட மதுரையில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் முத்துசாமி, ஒன்றியச் செயலாளர் மலைச்சாமி, தொப்பம்பட்டியில் ஒன்றியச் செயலாளர் ராமசாமி, ரெட்டியார்சத்திரத்தில் மாவட்டச்குழு உறுப்பினர் பிஏ கருப்பணன் ஆகியோர் கே.தங்கவேல் மறைவிற்கு அஞ்சலி செலுத்தினர்.

தேனி
தேனிமாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்விற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.தயாளன் தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் டி.வெங்கடேசன், ஏ.வி.அண்ணாமலை, சி.முனீஸ்வரன், டி.நாகராஜ், பி.ராமமூர்த்தி, இ.தர்மர், டி.ஜெயப்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்கம்பம் கட்சி அலுவலகத்தில் ஏரியாக்குழு உறுப்பினர் பி முருகேசன் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் ஏரியாசெயலாளர் ஜிஎம் நாகராஜன், எஸ்.பன்னீர் வேல், எஸ் சின்னராஜ் பி கருப்பசாமி. எஸ்.கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.சின்னமனூரில் ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.பொம்மையன் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.ஆறுமுகம், போடியில் செயலாளர் எஸ்.செல்வம் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.ராஜப்பன், எல்.ஆர்.சங்கரசுப்பு, மீனா, தங்கபாண்டி, செல்லப் பாண்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
பெரியகுளத்தில் நடைபெற்ற இரங்கல்கூட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராமச்சந்திரன், டி.கண்ணன், சு.வெண்மணி, ஜி.முத்துகிருஷ்ணன், பிரேம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.கோம்பையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் ஏரியா செயலாளர் சி.வேலவன், எஸ்.சுருளிவேல், மனோகரன், ராஜா உள் ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைெற்ற அஞ்சலி நிகழ்வில் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தெட்சிணாமூர்த்தி, பசலை நாகராஜ் அண்டக்குடி வேலு, மற்றும் இளமாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.இராமநாதபுரம் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் தாலுகாசெயலாளர் பி.செல்வராஜ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.குருவேல், இ.கண்ணகி, என்.கலையரசன் மற்றும் கல்யாணசுந்தரம், ஜெயலெட்சுமி, இராமமூர்த்தி, வாசுதேவன், இராமலிங்கம், வழக்கறிஞர் விக்ரமன், வெங்கடசுப்பிமணியன், சண்முகம், புஷ்பராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.இராமேஸ்வரம் மாவட்டக்குழு உறுப்பினர் ஜஸ்டின் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் க.கருணாகரன், தாலுகா செயலாளர் ஜி.சிவா, இ.ஜஸ்டின், எம். கருணாமூர்த்தி, ஏ.அசோக், கே.மணிகண்டன், ஏ.ஜேம்ஸ் ஜஸ்டின், ஏ.ஆரோக்கிய நிர்மலா, ஏ.ஞானசேகர், டி.ராமச்சந்திர பாபு, டி.மாரிமுத்து, கே.கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.